‘மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு!’

ஜூ.வி சொன்னதை உறுதி செய்த தணிக்கை அறிக்கை

முன்னறிவிப்பு இல்லாமல் ஏரி திறப்பு, நிவாரணப் பொருள்களில் ஸ்டிக்கர், மீட்பிலும் நிவாரணத்திலும் பொங்கிய மனிதநேயம் என நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுத்த, சென்னையைப் பெரு வெள்ளம் சூழ்ந்த 2015-ம் ஆண்டை மறக்க முடியுமா?

வலிகள், போராட்டங்கள், உயிரிழப்புகள் ஆகிய அனைத்தையும்விட அரசு காட்டிய மெத்தனம் நம்மைவிட்டுக் கடந்து போய்விடாது. இந்த அவலங்கள் அனைத்தையும் அப்போதே பதிவுசெய்தது ஜூனியர் விகடன். ‘பயனற்றுப்போன ‘தானே’ புயலின் பாடங்கள்!’, ‘தாமதமாக வந்த முதல்வர்... அலட்டிக்கொள்ளாத அமைச்சர்கள்! செயல்படாத மேயர்’, ‘மழை... யார் செய்த பிழை?’, ‘பேரழிவிலும் பப்ளிசிட்டி... ஆளும்கட்சி அட்ராசிட்டி’, ‘எச்சரிக்கைகளை புறந்தள்ளிய தமிழக அரசு’ ஆகிய தலைப்புகளில் 17.11.2015, 20.11.2015, 08.12.2015, 11.12.2015 தேதியிட்ட இதழ்களில் எழுதியிருந்தோம். ‘மழையின் தவறு அல்ல... மனிதனின் தவறு!’ எனத் தலைப்பிட்டு 11.12.2015 தேதியிட்ட ஜூவி-யில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். இதே கருத்துதான் இப்போது வெளியாகியிருக்கும் இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கையிலும் இடம்பெற்றிருக்கிறது. 

‘சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வெள்ள மேலாண்மை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ளுதல்’ என்ற தலைப்பில் தணிக்கைத் துறை அளித்த ரிப்போர்ட் தமிழக சட்டசபையில் வைக்கப்பட்டிருக்கிறது. ‘‘சென்னை பெரு வெள்ளம், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு. செம்பரம்பாக்கம் ஏரியில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதற்கு மனிதத் தவறே காரணம்’’ எனக் கண்டறிந்திருக்கிறது தணிக்கைத் துறை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick