ஜியோவுக்கு க்ரீன் சிக்னல்... கோவைக்கு ரெட் சிக்னல்!

உலகத்தரப் பல்கலைக்கழக சர்ச்சை

ன்னும் தொடங்கப் படாத, முகவரி கூட இல்லாத, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ இன்ஸ்டிட்யூட்டுக்கு மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. அதேபோல ‘கோவையில் 3,000 கோடி ரூபாய் மதிப்பில், உலகத்தரப் பல்கலைக் கழகம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கானல் நீராக்கியுள்ளது’ என்ற கூக்குரலும் இப்போது எழுந்திருக்கிறது.

கோவையில் பாரதியார் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்கள் இருந்தாலும், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்றவை போல மத்தியப் பல்கலைக்கழகமோ அல்லது உலகத்தரப் பல்கலைக்கழகமோ அமைக்கப்பட வேண்டும் என்பது, கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. 2008-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசு, ‘கோவையில் 3,000 கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தது. அந்த அறிவிப்பு அப்படியே இருக்க, தனியார் கல்வி நிறுவனங்கள் பயன்பெறக் கூடிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, மத்திய பி.ஜே.பி அரசு. அதாவது, மூன்று அரசுப் பல்கலைக்கழகங்களுக்கும், மூன்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் உலகத்தரப் பல்கலைக்கழகமாக மாறும் அளவுக்கு நிதியுதவி செய்வதே இந்த அறிவிப்பு. இவற்றில் அரசு நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை ஐந்து ஆண்டுகளுக்கு 1,000 கோடி ரூபாய் தரும். இதில் ஜியோ இன்ஸ்டிட்யூட் இன்னும் தொடங்கப்படவே இல்லை. இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில் ஜியோ இன்ஸ்டிட்யூட்டுக்கு இணையதளம்கூட இல்லை. அந்த நிறுவனம் வருவதற்கு, இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் என்று கூறப்படுகிறது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick