மின் இணைப்பிலும் தட்கல்! - ஆளும்கட்சி தலையீட்டால் சிக்கல்

விவசாயத்துக்கு இலவச மின் இணைப்பு கேட்டு பலரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பல்லாயிரம் விவசாயிகள் பயிர் செய்யவே முடியாத சூழ்நிலை உள்ளது. இந்தத் தவிப்பைப் போக்குவதற்காகக் கடந்த ஆண்டு தட்கல் முறையில் 10 ஆயிரம் மின் இணைப்புகள் முதல்முறையாகத் தரப்பட்டன. அதேபோல இந்த ஆண்டும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தட்கல் முறையில் 10 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் கொடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால், ‘‘இதில் ஆளும்கட்சியினர் தலையீடு அதிகம் இருக்கிறது. அவர்கள் பரிந்துரை செய்பவர்களுக்கே சீனியாரிட்டி கொடுக்கப்படுகிறது’’ என விவசாயிகள் புகார் வாசிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick