"கிறிஸ்டி நிறுவனத்துக்காகவே முட்டை டெண்டர் நிறுத்தப்பட்டது!” | Egg Tenders stopped for Christy Industry - Junior Vikatan | ஜூனியர் விகடன்

"கிறிஸ்டி நிறுவனத்துக்காகவே முட்டை டெண்டர் நிறுத்தப்பட்டது!”

மிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கான முட்டைகள் கொள்முதல் செய்வதற்கு ஆண்டுதோறும் டெண்டர் விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, சத்துணவு மையங்களுக்குத் தினமும் 50 லட்சம் முட்டைகளை சப்ளை செய்ய ரூ.480 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர், கடந்த ஜூன் மாதம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. தற்போது வருமானவரித் துறை ரெய்டில் சிக்கியுள்ள கிறிஸ்டி குழுமத்தின் மூன்று நிறுவனங்கள், ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு பண்ணையாளரின் நிறுவனம் என ஆறு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. 

இந்த டெண்டரை இறுதிசெய்யும் பணிகள், சென்னை தரமணியில் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை மையத்தில் ஜூலை 11-ம் தேதி காலை தொடங்கியது. டெண்டரை இறுதிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபோது, மதியம் 3.30 மணியளவில் அந்த அறைக்குள் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த சிவ.இளங்கோ, செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் உள்ளே நுழைந்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், ‘யார் நீங்கள்?’ என்று கேட்டுள்ளனர். ‘நாங்கள், டெண்டர் விடும் பணி வெளிப்படையாக நடக்கிறதா என்பதைப் பார்க்க வந்தோம். உங்கள் பணியைத் தடுக்க வரவில்லை’ என்று கூறியுள்ளனர். ஆனால் அதிகாரிகள், ‘டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் மட்டும்தான் இங்கே இருக்க முடியும்’ என்று கூறி, அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick