நிழல் சாம்ராஜ்ஜியம் நடத்திய ஜெ.பி! - ரெய்டில் சிக்கியது எப்படி? | IT raid on Agni group of companies - Junior Vikatan | ஜூனியர் விகடன்

நிழல் சாம்ராஜ்ஜியம் நடத்திய ஜெ.பி! - ரெய்டில் சிக்கியது எப்படி?

நிழல் உலக தாதாக்கள் போல, நிழல் உலக அரசியல்வாதிகளும் உண்டு. அந்த வகையில் அதிர வைக்கிறது... ஜெ.பி என்று அழைக்கப்படும் ஜெயப்பிரகாஷின் அபரிமிதமான வளர்ச்சி. இவரை, ‘அக்னி ஜெ.பி’ என்றுதான் அழைக்கிறார்கள். காரணம், அக்னி என்கிற பெயரில் சென்னையில் கட்டுமான நிறுவனம், விளம்பரம் நிறுவனம் மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்திவருவதுதான். ‘‘தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எங்கள் அக்னி ஜெ.பி-யின் பவரை யாராலும் அசைக்க முடியாது” என்கிறார்கள் ஜெ.பிக்கு நெருக்கமானவர்கள். முழுக்க முழுக்க நிழல் சக்தியாகவே தன்னை இத்தனை ஆண்டு காலம் தமிழக அரசியலில் நிலைநிறுத்தி வைத்திருந்த இந்த ஜெ.பி., சமீபத்திய வருமானவரித் துறையினரின் அதிரடி சோதனையால் வெளிஉலகுக்குத் தெரியவந்துள்ளார்.

முட்டை மற்றும் பருப்பு சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனங்களில் கடந்த வாரம் வருமானவரித் துறையினர் தொடர் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் அக்னி குழுமமும் சிக்கியது. இதன் தலைவர்தான் இந்த ஜெ.பி. இந்த அளவுக்கு இவர் கொடிகட்டிப் பறப்பதற்கு ஆரம்பக் காரணம், இவர் அ.தி.மு.க-வின் அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனனின் அக்கா மகன் என்பதுதான்.

அவருக்கு நெருக்கமானவர்களிடம் மேற்கொண்டு துருவியபோது, அவர்கள் சொன்ன தகவல்கள் வாயைப் பிளக்க வைத்தன. ‘‘ஜெயப்பிரகாஷ், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் படித்துவிட்டு, சுயதொழில் புரியும் ஆர்வத்தில் ஜெ.பி டயர்ஸ் என்ற பெயரில் கடையைத் திறந்தார். ஜெயலலிதா முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற நேரம் அது. அவரின் அமைச்சரவையில் மதுசூதனன் கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார். ஜெயப்பிரகாஷுக்கு அடித்தது ஜாக்பாட். தாய்மாமன் மதுசூதனனின் நிழலாக வரத்துவங்கினார். அப்போது, சமூகநலத் துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரியின் நட்பும் இவருக்குக் கிடைக்க, சத்துமாவு சப்ளை உள்ளிட்ட வேலைகளைக் கையில் எடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick