கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கழுகார் பதில்கள்!

சண்முகசுந்தரம், சென்னை-81.

எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றால், அவர் கட்சியின் அனைத்து எம்.பி-க்களும் வரிசையில் நின்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றது சரியா? மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் போன்றோரெல்லாம் இப்படியா நடந்துகொள்கிறார்கள்?


ஜெயலலிதா தன் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சட்டசபைக்குப் புறப்பட்டால்கூட வரிசையாக அடிமைகள் போல நின்று அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பது வழக்கம். கூடவே வரிசையாகக் காலில் வேறு விழுந்து வைப்பார்கள். இதையெல்லாம் உதட்டோரப் புன்னகையோடு ரசித்தபடியே செல்வார் ஜெயலலிதா. தன்னை ‘வேட்டி கட்டிய ஜெயலலிதா’வாக நினைத்துக்கொண்டிருக்கும் எடப்பாடி, இதையெல்லாம் எதிர்பார்க்காமல் இருந்தால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். பிற மாநிலங்களில் எல்லாம் சுய அடையாளம் கொண்டவர்கள்தான் அதிகமாக அரசியலில் இருக்கின்றனர். இங்கே அரசியலில் அடிமை வம்சம் அதிகம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick