மிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை! - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/07/2018)

மிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை! - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை

‘‘அ.தி.மு.க-வின் அதிகார மையமாக ரஜினி... இது எப்படி இருக்கு?’’ என்றபடியே என்ட்ரி ஆனார் கழுகார்.

‘‘நம்புகிற மாதிரி இல்லையே?’’ என்றோம்.

‘‘எதுவும் நடக்கலாம் என்பதுதான் அரசியல் தியரி’’ எனச் சொல்லிவிட்டு, குறிப்பு நோட்டைப் புரட்ட ஆரம்பித்த கழுகார், ‘‘சென்னையில் பி.ஜே.பி நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா ஆற்றிய உரைக்கு அர்த்தம் தேடும் பி.ஜே.பி சீனியர் தலைவர்கள் சிலர், இதைத்தான் சொல்கிறார்கள். ‘தமிழகத்தில் பி.ஜே.பி எங்கே இருக்கிறது என்று கேட்பவர்கள், 2019 மார்ச் மாதத்தில் பி.ஜே.பி-யைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, கூட்டணி குறித்து முடிவெடுப் போம். தமிழகத்தில் வலிமையான கூட்டணி அமையும். தமிழகத்தில் ஊழல் இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும்’ என்று பேசினார் அமித் ஷா.’’

‘‘அதற்கு என்ன?’’

‘‘ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் படத்தை முடித்துவிட்டு அரசியலுக்கு வருவார் என்கிறார் தமிழருவி மணியன். செப்டம்பருக்குள் அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும். 2.0 படம் நவம்பரில் ரிலீஸ் ஆகிறது. கிட்டத்தட்ட அந்த நேரத்தில் ரஜினி முழுமையாக அரசியலுக்கு வந்திருப்பார்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க