கம்பேரிஸன் கோவாலு! | Translation and H.raja - Funny - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கம்பேரிஸன் கோவாலு!

மிழகத்துக்கு வாராது வந்த மாமணி அமித் ஷாவை மற்றவர்கள் வைத்துச் செய்ததைவிட சிறப்பாகச் செய்திருக்கிறார் ஹெச்.ராஜா! சும்மாவே பாலிவுட் வில்லனையும் கேரளத்து ஹீரோயினையும் மிக்ஸ் பண்ணிய ஸ்லாங்கில்தான் தலைவருக்குத் தமிழே வரும். இதில் மொழிபெயர்ப்பு பொறுப்பு வேறு! அவரின் இந்த அசாத்தியத் திறமை மேலும் சில பொறுப்புகளை அவருக்குக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமே இல்லை.

* முன்னொரு காலத்தில் அருமையான டப்பிங் படங்கள் வந்துகொண்டிருந்தன. ஜாக்கிசான் கூட ‘ஏய் தாய்க்கெழவி’ என பொன்னம்பலம் வாய்ஸில் பேசுவார். ஆனால், இப்போது அப்படியான படங்கள் மிஸ்ஸிங். இந்தக் குறையைப் போக்க ‘ஜுராஸிக் வேர்ல்டு’ முதல் டி.ராஜேந்தரின் இசைக் குறிப்புகள் வரை எல்லாவற்றுக்கும் ராஜா டப்பிங் செய்தால் சிறப்பாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick