“மக்கள் மீது வழக்குப் போட்டு நிலத்தைப் பிடுங்கும் இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்!”

வெடிக்கும் வேல்முருகன்

ளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிமீது தாக்குதல் நடத்திய வழக்கில் நிபந்தனை ஜாமீன்பெற்று, நாகர்கோவிலில் தங்கியிருந்து கோட்டாறு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். தினமும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவரும் அவரைச் சந்தித்துப் பேசினோம்.

‘‘உங்கள் மீதான காவல்துறை நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?’’

‘‘தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத அரச பயங்கரவாதம் இப்போது நடக்கிறது. காவல் துறையின் காட்டுத் தர்பார் ஆட்சியைத் தமிழக அரசு நடத்திக்கொண்டிருப்பதைக் காண்கிறேன். என்னைப் போன்று பல தலைவர்கள் இன்று சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் சில கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. அவசரநிலைக் காலத்தைவிட இது மோசமாக இருக்கிறது. தூத்துக்குடியில் 13 அப்பாவி களைச் சுட்டுப் படுகொலை செய்தார்கள். அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்ல நான் தூத்துக்குடி சென்றபோது விமான நிலை யத்தில் வைத்து என்னைக் கைது செய்தார்கள். நான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் நூற்றுக்கணக்கான மக்களைக் கைது செய்தார்கள். இன்னமும் தேடித் தேடிக் கைது செய்துகொண்டிருக்கிறார்கள். எட்டுவழி பசுமைச்சாலைக்கு எதிராகப் போராடியவர்கள், ஜனநாயக முறைப்படி முகநூலில் கருத்துகளைப் பதிவு செய்தவர்கள், பியூஸ் மானுஷ், மன்சூர் அலிகான், வளர்மதி, இயக்குநர் கவுதமன், இணையதளத்தில் கருத்து பதிவிட்ட ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசு வகுத்தளிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயலாற்றிக்கொண்டிருக்கிறது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick