‘‘நீட் தேர்வு விலக்கு... தமிழக அரசுக்கு அக்கறையில்லை!’’ - டி.கே.ரங்கராஜன் பொளேர்

நீட் தேர்வு வினாத்தாளைத் தமிழில் மொழிபெயர்த்ததால் ஏற்பட்ட குளறுபடிகளுக்குக் கருணை மதிப்பெண் கேட்டுத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பானது மத்திய அரசு மற்றும் சி.பி.எஸ்.இ-யின் அலட்சியத்துக்குச் சம்மட்டி அடியாக விழுந்துள்ளது.

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாளில் 49 கேள்விகள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் எம்.பி-யுமான டி.கே.ரங்கராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், ஜூலை 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட 49 கேள்விகளுக்கும் தலா நான்கு மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்’ என்று உயர் நீதிமன்றம் சி.பி.எஸ்.இ-க்கு உத்தரவிட்டது.

‘‘இரண்டு வாரங்களுக்குள் மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் வழங்கப்பட்டுப் புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், அதுவரை மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் தேடித்தந்த தீர்ப்பாகவே இதைப் பார்க்கிறேன். இந்த வழக்கில், சி.பி.எஸ்.இ தரப்பில் மேல்முறையீடு செய்யக்கூடும். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. அதேசமயம், நானும் இதுகுறித்து கேவியட் மனு தாக்கல் செய்துள்ளேன். என்னிடமும் கருத்து கேட்டபிறகுதான், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கையே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்’’ என்கிறார் டி.கே.ரங்கராஜன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick