“நேரம் வரும்போது நம் வேலையைக் காட்டுவோம்!” | M.K.Azhagiri Political Activities - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“நேரம் வரும்போது நம் வேலையைக் காட்டுவோம்!”

அழகிரி அதிரடி பிளான்

ழகிரியின் வாட்ஸ்அப் புரொஃபைல் புகைப்படம், ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற வாசகத்துடன் கம்பீரமாக இருக்கிறது. கடந்த வாரம் மதுரையில் நடந்த திருமண விழாவில் ஸ்டாலினை கிண்டல் செய்து பேசியவர், உடனே கருணாநிதியின் உடல்நலத்தை விசாரிக்க கோபாலபுரம் சென்றார். ஸ்டாலின் லண்டன் கிளம்பிச் செல்வதற்குமுன் அழகிரியின் நடவடிக்கைகள் தி.மு.க-வில் பெரும் புயலையே ஏற்படுத்திவிட்டன.

‘‘நான்கு வருடம் ஒதுங்கியிருந்தது போதும். இனியும் இப்படியே இருந்தால் யாரென்று கேட்டுவிடுவார்கள். அதனால், அதிரடி அரசியல் நடத்த அண்ணன் முடிவெடுத்துவிட்டார்’’ என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.   இதன் வெளிப்பாடாகவே, கடந்த மாதம் தன் விசுவாசி பி.எம்.மன்னன் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட அழகிரி, ‘‘பதவிக்கு ஆசைப்படாத மன்னன் மாதிரியான உண்மைத் தொண்டர்கள் என்னிடம் இருக்கிறார்கள். ஸ்டாலினிடம் இருப்பவர்கள் எல்லோரும் பதவிக்காக இருப்பவர்கள்’’ என்று பேசினார். அப்போது, இதற்கு ஸ்டாலின் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. அதைத்தொடர்ந்து கடந்த வாரம் பாலமேட்டில் நடந்த மதுரைவீரன் என்பவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டவர், ‘‘உண்மையான செயல்வீரர்கள் என்னிடம்தான் இருக்கிறார்கள். செயல்படாதவர்கள் பதவிக்காக அங்கே இருக்கிறார்கள்’’ என்றார். இந்த முறை அழகிரியின் கிண்டல் பேச்சுக்கு, ‘‘கட்சியில் இல்லாதவர் அழகிரி. ஸ்டாலின், சிறப்பாகக் கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்’’ என்று ஆர்.எஸ்.பாரதி பதில் கொடுத்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick