தள்ளிப்போகுமா ராஜ்ய சபா துணைத் தலைவர் தேர்தல்?

பி.ஜே.பி கூட்டணிக்குள் புதிய கட்சிகள் ஐக்கிய மாகுமா? மூன்றாவது அணிக்கான முயற்சிகளை முறியடித்து காங்கிரஸ் ஒரு மெகா கூட்டணியை அமைப்பது சாத்தியமாகுமா? ராஜ்ய சபா துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றால், இந்த இரு கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும். ஜூலை 18-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இதனால்தான் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இதுவரை இந்தப் பதவியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பி.ஜே.குரியன் பதவிக்காலம் ஜூலை முதல் தேதியுடன் முடிந்துவிட்டது. ஆகவே, இந்தத் தொடரின்போது ஒருவரை ஒருமனதாகத் தேர்வு செய்ய வேண்டும். அல்லது தேர்தல் நடத்த வேண்டும். பி.ஜே.குரியனுக்கு நடைபெற்ற பிரிவுபசார விழாவில், ‘‘ஆளும்கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் ஒருமித்த கருத்து அடிப்படையில் புதிய துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன்’’ என்று துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick