மலை கிராமத்தில் ஒரு ஸ்மார்ட் பள்ளி! - புதுமை செய்த போலீஸ்

போலீஸ் குறித்த சர்ச்சைகளே தலைப்புச் செய்திகளாகும் இந்தக் காலத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பழங்குடி இனக் குழந்தைகள் படிக்கும் குற்றியார் அரசு நடுநிலைப் பள்ளியைத் தன் சொந்தச் செலவில் ஸ்மார்ட்டாக மாற்றி ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் நக்ஸல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சாம்சன். ஸ்மார்ட்டாக மாற்றப்பட்ட பள்ளியை, கலெக்டர் பிரசாந்த் வடநெரே திறந்து வைத்திருக்கிறார்.

நாகர்கோவிலில் இருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது குற்றியார் மலை கிராமம். பேச்சிப்பாறை அணைப் பகுதியிலிருந்து 17 கி.மீ தூரம் காட்டுச் சாலையில் பயணித்தால் தான் குற்றியார் சென்றடைய முடியும். பி.எஸ்.என்.எல் சிக்னல் மட்டும் ஒரு பாயின்ட் விட்டுவிட்டுக் கிடைக்கும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற எந்தச் சமூக ஊடக வட்டத்துக்குள்ளும் வரமுடியாத குற்றியாரில், மரங்களுக்கிடையே அமைந்திருக்கிறது அரசு நடுநிலைப் பள்ளி. பெயின்ட் உதிர்ந்த நிலையில் பாழடைந்த கட்டடம் போன்று காட்சியளித்த இந்தப் பள்ளி, இப்போது தனியார் பள்ளி போலப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. காம்பவுண்டு சுவரில் தேசத்தலைவர்கள் புகைப்படங்களும் அவர்களின் பொன்மொழிகளும் பளிச்சிடுகின்றன. கல்விக்கண் திறந்த காமராஜர் அருகில், இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களையே நிறுத்தி அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick