சென்னைக் குடிநீரில் திருப்பூர் சாயக்கழிவு? - நொய்யல் விபரீதம்

‘நொய்யல் ஆறு மாசடையாமல் தடுப்பதற்கு ரூ.150 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப் படும்’ என்று ஜூலை 9-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். நொய்யலில் என்ன பிரச்னை? சில மாதங்களுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்து நதிநீர் நுரையுடன் வர, ‘‘அது சோப்பு நுரை’’ என்று சொல்லிச் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் சர்ச்சையை ஏற்படுத்தினார். தீராத பிரச்னையாகத் தொடரும் நொய்யல் ஆற்று சாயக்கழிவு பிரச்னை, சென்னைக் குடிநீர்வரை பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் சின்னாறு மற்றும் காஞ்சி மாநதி ஆகியவை இணைந்து நொய்யல் ஆறாக உருப்பெற்று, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாகச் சென்று, கரூர் மாவட்டத்தின் நொய்யல் என்ற கிராமத்தின் அருகில் காவிரியில் கலக்கிறது. ஒரு காலத்தில் தூய தண்ணீரைக் கொண்டுவந்து கரூர் மாவட்டம் வரை மக்களின் தாகம் தீர்த்த ஆறு இது. இப்போது இந்த நதியில் திருப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளின் கழிவுநீரைச் சுத்திகரிக்காமல் திறந்துவிடுவதாக கரூர்வாசிகள் புலம்பி வருகிறார்கள். சமீபநாள்களில் இந்தப் பிரச்னை இன்னும் தீவிரமாகி, தண்ணீரின் நிறமே மாறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick