வாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்! | Whatsapp sexual harassment on Actress Jayalaxmi - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்!

மிழ் சினிமா உலகில் இது பாலியல் குற்றச்சாட்டுகளின் சீஸன் போலிருக்கிறது. ஒருபக்கம் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகள் பரபரப்பைப் பற்றவைத்துள்ளன. இன்னொரு பக்கம், வாட்ஸ்அப்பில் ஒரு பாலியல் கும்பல் தனக்கு ஆபாச அழைப்பு விடுத்ததாக நடிகை ஜெயலட்சுமி புகார் கொடுக்க, இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

30 தமிழ்ப்படங்கள், நிறைய டி.வி சீரியல்களில் நடித்துள்ள ஜெயலட்சுமிக்கு, ‘ரிலேஷன்ஷிப் சர்வீஸ்’ என்ற ‘வாட்ஸ்அப்’ குரூப்பிலிருந்து ஒரு மெஸேஜ் வந்திருக்கிறது. ‘ஹாய், ஹலோ, எப்படியிருக்கீங்க?’ என்றெல்லாம் இல்லாமல், நேரடியாகவே, ‘உங்கள் ரேட் எவ்வளவு?’ என்றுதான் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர். அடுத்தடுத்து வந்த மெஸேஜ்களில், ‘நீங்கள் சம்மதித்தால், 30 ஆயிரம் தொடங்கி மூன்று லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்’ என ஜெயலட்சுமியை அலறவிட, அவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, வாட்ஸ் அப் குரூப் மூலம் தூதுவிட்ட பாலியல் தொழில் தரகர்கள் முருகப்பெருமாள், கவியரசு ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick