லத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே! - மக்களை மிரட்டும் போலீஸ் | Police use now a days Pepper Spray Attack - Junior Vikatan | ஜூனியர் விகடன்

லத்தி... துப்பாக்கி... இப்போது பெப்பர் ஸ்ப்ரே! - மக்களை மிரட்டும் போலீஸ்

சென்னை ராயப்பேட்டையில் ஜூலை 2-ம் தேதி இரவு தகராறு செய்த ரவுடி ஆனந்தன் உள்ளிட்ட கும்பலைக் கலைந்து செல்லச் சொன்ன தலைமைக் காவலர் ராஜவேலு, அந்தக் கும்பலால் வெட்டப்பட்டார். அடுத்த 24 மணி நேரத்தில் என்கவுன்டரில் ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார். காவலர் ராஜவேலு ரோந்து சென்றபோது, ஆனந்தனும் அவரின் நண்பர்களும் மது அருந்திக்கொண்டிருந்ததாகவும், போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ராஜவேலுவை வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங் களில் இதுபோல சுமார் 70 போலீஸார் தாக்கப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்செயல்களில் பெரும்பாலானவை குடிபோதையில் நிகழ்த்தப்பட்டவை என்பதால், இதுபோன்ற வன்முறைகளைக் கையாள ஒரு புதிய வழிமுறையைக் கையில் எடுத்திருக்கிறது காவல்துறை. மது போதையில் பொது இடங்களில் தகராறு செய்பவர்களின் கண்களில் ‘பெப்பர் ஸ்ப்ரே’ அடித்துக் கட்டுப்படுத்துவதுதான் அந்த வழிமுறை. இதற்காக, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து 400 ‘பெப்பர் ஸ்ப்ரே’ பாட்டில்களை சென்னை மாநகரக் காவல்துறை வாங்கியுள்ளது. சோதனை முயற்சியாக, சென்னை அம்பத்தூர் வட்டத்தில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கு தலா 10 பெப்பர் ஸ்ப்ரே பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறையின் இந்த முடிவு இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick