பத்தாயிரம் கோடியில் சாலை... தேர்வை நடத்த திறன் இல்லை!

தனியாருக்கு டெண்டர் விடும் டி.என்.பி.எஸ்.சி

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் போட்டித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும் பொறுப்பைத் தனியாரிடம் விடுவது ஊழலுக்கு வழிவகுக்கும் என்பது போன்ற விமர்சனங்கள் வந்துள்ளபோதிலும், தன் முடிவில் டி.என்.பி.எஸ்.சி உறுதியாக இருக்கிறது.

அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்வதற் கானப் போட்டித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவது என்றும், அப்படி ஆன்லைனில் தேர்வை நடத்தும் பொறுப்பைத் தனியாரிடம் விடுவதும் என்றும் டி.என்.பி.எஸ்.சி முடிவுசெய்துள்ளது. அதற்கான நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கான டெண்டரையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அரசுப் பணிகளுக்கான அனைத்துத் தேர்வுகளையும் டி.என்.பி.எஸ்.சி-யே நேரடியாகக் கண்காணித்து நடத்தும்போதே வினாத்தாள் லீக் ஆவது, தேர்வு முறைகேடு எனப் பல பிரச்னைகள் வருகின்றன. அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், ஆன்லைன் தேர்வை நடத்தும் பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைப்பது நல்லதல்ல என்று தி.மு.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick