மைத்துனர் கைகாட்டினால் பதவி! - சர்ச்சையில் தினகரன் | Inter-party controversy in Dinakaran's party - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மைத்துனர் கைகாட்டினால் பதவி! - சர்ச்சையில் தினகரன்

‘குடும்பம் வேறு, கட்சி வேறு. குடும்பத்தினருக்குக் கட்சிப் பொறுப்புகள் தரமுடியாது’ என்றெல்லாம் அடிக்கடி சொல்லிவருகிறார் டி.டி.வி.தினகரன். ஆனால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் கைகாட்டும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் தரப்படுவதால், கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். அ.ம.மு.க-வின் தஞ்சாவூர் மாநகர மாவட்டச் செயலாளர் என்ற பதவியைப் புதிதாக உருவாக்கி, அதற்கு ராஜேஸ்வரன் என்பவரைச் சமீபத்தில் நியமித்தார் தினகரன். இதுதான் இப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அ.ம.மு.க வட்டாரத்தில் பேசினோம். ‘‘தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, தஞ்சாவூரில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய தினகரன், ‘குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பொறுப்பு களை கொடுக்க, இது ஒன்றும் கம்பெனி இல்லை’ என்றார். ஆனால், டெல்லி சிறையில் தினகரன் இருந்தபோது அவருக்காக உழைத்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு, டாக்டர் வெங்கடேஷின் நண்பர் என்பதற்காக ராஜேஸ்வரனுக்குப் பொறுப்பு கொடுத்துள்ளார். மேலும், கழக அமைப்புச் செயலாளராக வெங்கடேஷின் மாமனார் பண்ணைவயல் பாஸ்கரன் உள்ளார். மாவட்ட மாணவரணித் துணைச்செயலாளராக வெங்கடேஷின் தாய்மாமன் மகன் சதீஷ் இருக்கிறார். வெங்கடேஷின் நண்பர்களான பழனிவேல், சூரக்கோட்டை பாலு உள்பட பலரும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick