குளறுபடி வாக்குமூலங்கள்... ஜெ. மரணத்தில் குழப்பும் அப்போலோ! | Apollo Hospitals Messy confessions about Jayalalitha death - Junior Vikatan | ஜூனியர் விகடன்

குளறுபடி வாக்குமூலங்கள்... ஜெ. மரணத்தில் குழப்பும் அப்போலோ!

‘ஜெயலலிதா ஸ்வீட் சாப்பிட்டார்’ என்று அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா வுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் சாட்சியம் அளிக்க... ‘ஜெயலலிதாவுக்கு ஸ்வீட் வழங்கப்பட வாய்ப்பே இல்லை’ என்று செவிலியர் சொல்ல... குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம். ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து விசாரணை நடத்திவரும் இந்த ஆணையம், தினம் தினம் புதுப்புதுக் குழப்பங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

சசிகலா குடும்பத்தினர், போயஸ் கார்டன் ஊழியர்கள், அப்போலோ மருத்துவமனையின் ஊழியர்கள் என வரிசையாக விசாரணைப் படலத்தை நீட்டித்துவருகிறது ஆறுமுகசாமி ஆணையம். இந்த ஆணையத்தில், அப்போலோ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அளித்த வாக்குமூலங்கள் ஒருபுறம் பரபரப்பையும், மறுபுறம் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கு  ஜூலை 29-ம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்தப்படும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிவித்துள்ளது. இந்த விசாரணையின்போது, ஆணையத்தின் வழக்கறிஞர், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள், ஆணையம் தரப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கெடுப்பார்கள் என்று தெரிகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick