சகலகலா சுப்பிரமணியம்! - முதல்வரின் சம்பந்தி வளர்ந்த கதை | EPS relative Perundurai Subramaniam story - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/07/2018)

சகலகலா சுப்பிரமணியம்! - முதல்வரின் சம்பந்தி வளர்ந்த கதை

‘‘தமிழகம் முழுவதும் எனக்கு உறவினர்கள் உள்ளனர். எங்கு ரெய்டு நடந்தாலும் எனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றனர். தமிழகத்தில் அனைத்து அரசு டெண்டர்களும் சட்டத்துக்கு உட்பட்டே நடக்கின்றன’’ என ஜூலை 18-ம் தேதி கோவையில் ஆதங்கத்துடன் பேட்டி கொடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘‘ஈரோடு ராமலிங்கம் அண்டு கோ நிறுவனத்தை நடத்திவரும் ராமலிங்கம், என் மகனின் சகலைக்கு அப்பா. அவர், 30 ஆண்டுகளாக கான்ட்ராக்ட் தொழில் செய்கிறார். தி.மு.க ஆட்சியில்தான் அதிகமாக கான்ட்ராக்ட் எடுத்தார்’’ என்றார்.

தன் மகனின் சகலைக்கு அப்பா பற்றியெல்லாம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தன் மகனின் மாமனார் பற்றிப் பேச மறந்துவிட்டார். தன் சம்பந்தி பெருந்துறை சுப்பிரமணியம் பற்றிய தகவல்களை, திட்டமிட்டே அவர் தவிர்த்திருக்க வேண்டும். ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குறிவைத்தே இப்போது எஸ்.பி.கே நிறுவனத்தில் ரெய்டுகள் நடந்தன’’ என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ‘‘எஸ்.பி.கே நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான நாகராஜன், முதல்வரின் சம்பந்தியுடன் இந்த ரெய்டுக்குப் பிறகு, முதல்வரின் சம்பந்தி பங்குதாரராக இருக்கும் இரு நிறுவனங்கள் பற்றியும் விசாரணை நடைபெறும். அப்போது, அதிகார மையத்தில் இருக்கும் பலரின் வீடுகளில் எங்கள் அதிகாரிகள் நுழைவார்கள்’’ என வருமானவரித் துறை அதிகாரிகள் சூசகமாகத் தெரிவிக்கிறார்கள். ‘‘முதல்வரின் சம்பந்தி பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கு, முதல்வரின் கையில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு டெண்டரை எப்படிக் கொடுக்கலாம்’’ என ஸ்டாலின் இதனால்தான் கேள்வி எழுப்பினார்.