கரிமூட்டம் டு கான்ட்ராக்டர்! - செய்யாத்துரை வளர்ந்த கதை | Story of SPK Group Seyyadurai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/07/2018)

கரிமூட்டம் டு கான்ட்ராக்டர்! - செய்யாத்துரை வளர்ந்த கதை

ழுங்கான சாலை வசதியோ, போக்குவரத்து வசதியோ இல்லாத ஒரு கடைக்கோடிப் பகுதியில் பிறந்த ஒருவர், இன்றைக்கு தமிழகத்தின் மிகப்பெரிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர். வருமானவரித் துறையினர் சோதனை நடத்தும் அளவுக்கு மிகப்பெரிய கோடீஸ்வரர் செய்யாத்துரை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற ரெய்டுகளில் மிகப்பெரிய அளவில் பணமும் தங்கமும் சிக்கியது சேகர் ரெட்டி நிறுவனங்களில்தான். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது, செய்யாத்துரை குடும்பத்தின் எஸ்.பி.கே நிறுவனம்.

நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாத்துரையின் எஸ்.பி.கே நிறுவனங்களில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற வருமானவரிச் சோதனை, தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க-வினரை மட்டுமல்ல, எதிர்க்கட்சியான தி.மு.க-வினரையும் அதிரவைத்துள்ளது. சின்ன அளவில் பிசினஸ் செய்பவர்கள்கூட ஆர்ப்பாட்டமாக வலம்வரும் இந்தக் காலத்தில், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெண்டர்களை சத்தமில்லாமல் எடுத்திருக்கிறது இந்த நிறுவனம். செய்யாத்துரையை எந்தப் பொது நிகழ்ச்சியிலும் பார்க்க முடியாது. கேமராவின் கண்களில் படாமலே, அவர் குடும்பம் இருந்துவந்திருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க