நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்!

மோடி அரசுக்கு எதிராகத் தாங்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, தங்களின் ஆயுதமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நினைத்தன. ஆனால், எதிர்பாராத ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் அதைத் தங்களின் ஆயுதமாக மாற்றிவிட்டார் பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா.

பி.ஜே.பி அரசுக்கு எதிராக, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போதே நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் கொடுத்திருந்தன. சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘‘மக்களவை அமைதியாக நடந்தால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்’’ என்று கூறினார். ஆனால், காவிரி விவகாரத்தை வலியுறுத்தி அ.தி.மு.க-வின் எம்.பி-க்கள் தினமும் அவையை முடக்கினர். இதனால், அந்தத் தீர்மானங்கள் விவாதத்துக்கு வரவே இல்லை. ‘ஆளும் பி.ஜே.பி-யுடன் இணைந்துகொண்டு, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு வர விடாமல் தடுத்ததாக’ அ.தி.மு.க-மீது குற்றச்சாட்டு எழுந்தது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இதைத்தான் குறிப்பிட்டார்.

இந்த முறை மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முதல் நாளான ஜூலை 17-ம் தேதியே தெலுங்கு தேசம், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஆர்.எஸ்.பி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஏழு எம்.பி-க்கள் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் கொடுத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick