“சேலத்தில் பழங்குடிகள்... ஈரோட்டில் நாங்கள் யார்?”

மலையாளிப் பழங்குடிகளின் சோகம்

து அட்மிஷன் சீஸன். ஆனால், ஈரோடு மாவட்ட மலையாளிப் பழங்குடியினப் பிள்ளைகள் ஏக்கத்துடன் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். மலையாளி பழங்குடிகள்தான், தமிழ்நாட்டில் அதிகளவில் இருக்கும் பழங்குடி சமூகத்தினர். தர்மபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், கடலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இவர்கள் வசிப்பதாக தமிழக அரசின் பழங்குடியினர் பட்டியல் காட்டுகிறது. ஆனால், ஈரோடு மாவட்டம் பர்கூர் மற்றும் கடம்பூர் மலைப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 ஆயிரம் மலையாளிப் பழங்குடி மக்கள், இந்தப் பட்டியலில் இடம்பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர். பழங்குடி என்ற சான்றிதழ் கிடைக்காததால், கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியாமலும், அரசு வேலைவாய்ப்புகளை அடைய முடியாமலும் அவர்கள் அவதிப்படுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick