மனநிம்மதி தேடி வந்தவர்... மயக்கத்தில் சந்தித்த கொடூரம்!

சென்னையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், தமிழகத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்றால், திருவண்ணாமலையில் ரஷ்ய நாட்டு இளம்பெண் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், இந்தியாவுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வருகிறவர்களுக்கு, இந்தச் சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஆன்மிகத்தால் ஈர்க்கப்பட்டுப் பல்வேறு நாடுகளையும் சேர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ள ஆன்மிகத்தலங்களுக்கு மனநிம்மதி தேடி வருகை தருகின்றனர். இந்த வகையில், திருவண்ணாமலைக்கு ஏராளமான வெளிநாட்டினர் வருகின்றனர். அவர்கள், திருவண்ணாமலையில் பல்வேறு அமைப்புகள் நடத்தும் ஆசிரமங்களில் மாதக்கணக்கில் தங்கியிருந்து யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இப்படி, திருவண்ணாமலைக்கு வந்தவர்தான், ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண். ஜூலை 12-ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்த அவர், விசிறி சாமியார் என்றழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்துக்கு அருகில் கஸ்தூரி நகரில் உள்ள ஒரு சர்வீஸ்  அப்பார்ட்மென்டில் தங்கியிருந்தார். அப்போதுதான், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick