‘சாமுண்டா’ மாளிகை... அதிகாரிகள் கொட்டம்... விளம்பர ஆட்டம்!

ராஜ்பவனை ஆய்வு செய்வாரா கவர்னர்?

விழா நாயகர்களாகவே கவர்னர்கள் வலம் வந்தது ஒரு காலம். இன்று கவர்னர் போகும் இடங்களிலெல்லாம் எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை உக்கிரம். கவர்னர் மாளிகையிலிருந்து ஆண்டுக்குக் குறைந்தது 15 செய்திக்குறிப்புகள் வெளிவரும். எல்லாமே எந்த சுவாரசியமும் இல்லாத தகவல்களைத் தாங்கிவரும். ஆனால், பன்வாரிலால் புரோஹித் கவர்னர் ஆன பிறகு, அதிரடியாக அறிக்கைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ‘கவர்னரைப் பணி செய்யவிடாமல் தடுத்தால், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை’ என்கிற விநோத மிரட்டல், இந்தியாவின் எந்த மாநிலத்தின் ராஜ்பவனிலிருந்தும் ராஜநடை போட்டதில்லை.

‘‘பன்வாரிலால் புரோஹித் கவர்னர் ஆன பிறகு ராஜ்பவனில் பெருமளவில் செலவுகள் குறைக்கப்பட்டன. சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன’’ எனச் செய்திகள் இன்னொரு பக்கம் றெக்கை கட்டின. உணவு, விமானப் போக்குவரத்து, தோட்டப் பராமரிப்பு, பெட்ரோல், துப்புரவு, மின் கட்டணம், பராமரிப்பு என எல்லாம் குறைக்கப்பட்டு, சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகச் சொன்னார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick