RTI அம்பலம்: நீட் தேர்வு... அப்ளிகேஷன் மூலம் அரசுக்கு லாபம் 100 கோடி ரூபாய்!

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட விழுப்புரம் பிரதீபாவின் தந்தை சண்முகத்துக்கு, தன் மகளை நீட் தனிப் பயிற்சிக்கு அனுப்பும் அளவுக்கெல்லாம் வசதி இல்லை. வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு மகள் தயாராகட்டும் என்று 12 செட் பயிற்சிப் புத்தகங்கள் வாங்கிக்கொடுத்திருக்கிறார். ஒரு செட் புத்தகத்தின் விலை, 3,000 ரூபாய். நீட் தேர்வுக்குப் பயிற்சிதரும் எல்லாத் தனியார் நிறுவனங்களும் தலா ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை கட்டணம் வசூலிக்கின்றன. இப்படியான செலவுகள் செய்து பயிற்சி பெற்றுக்கொண்டு தேர்வெழுதத் தயாரானால், அங்கேயும் நம் மாணவர்களுக்குக் காத்திருக்கிறது ஒரு செக் பாய்ன்ட். நீட் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் 1,500 ரூபாய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்