ஆட்சிக்கே வேட்டு வைக்கும் கூவத்தூர் ரகசியம்! - ரெய்டில் சிக்கிய சி.டி | IT raid on SPK Group Seyyadurai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஆட்சிக்கே வேட்டு வைக்கும் கூவத்தூர் ரகசியம்! - ரெய்டில் சிக்கிய சி.டி

‘‘அருப்புக்கோட்டையில் இருக்கும் எஸ்.பி.கே நிறுவனங்களின் அலுவலகத்தில் ஓர் அறையை ஜூலை 20-ம் தேதி பூட்டி சீல் வைத்திருக்கிறது வருமானவரித் துறை. அந்த அறைக்குள் ஏகப்பட்ட ஆவணங்கள், லேப்டாப்கள் என பலவற்றையும் பத்திரமாக வைத்துப் பூட்டியுள்ளனர். அவை எல்லாவற்றையும் ஆராயும்போது, இந்த ஆட்சியே ஆட்டம் காணும்’’ என்று திகில் கிளப்புகிறார்கள், அ.தி.மு.க வட்டாரத்தில் சிலர்.

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரரான செய்யாத்துரையின் எஸ்.பி.கே நிறுவனங்களில் ஒரு வாரத்துக்கும் மேலாக ரெய்டு நடைபெற்றது. எஸ்.பி.கே நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்கள், வீடுகள் என சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை உள்பட பல இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.185 கோடி ரொக்கம், 107 கிலோ தங்கம், ரூ.10 கோடி மதிப்புள்ள வைரம், சொத்து ஆவணங்கள், முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட கணக்குகள் அடங்கிய பென் டிரைவ்கள், பவர் சென்டர்களுடன் பேசிய ஆடியோ பதிவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள் என்று பலவும் கைப்பற்றப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick