ஜெயலலிதாவுக்குக் களங்கம்... பூங்குன்றன் அழுகை!

‘‘ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து விசாரணை நடத்த வேண்டிய ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவைக் களங்கப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்கிறது” என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். “ஜெயலலிதாவைக் களங்கப்படுத்தும் கேள்விகள் வேண்டாம்” என, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் கண்ணீர்விட்ட சம்பவமும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நடைபெற்றுள்ளது.

பூங்குன்றன் இரு முறை ஆணையத்தில் சாட்சியம் அளித்தபிறகு, சசிகலா தரப்பால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். அதன்பிறகு, மறுவிசாரணைக்காகக் கடந்த வாரம் ஆறுமுகசாமி ஆணையத்தில் அவர் ஆஜரானார். அப்போது அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ஆணையத்தின் வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். அப்போது ஆணையத்தின் வழக்கறிஞர்கள், “கார்டனைப் பகைத்துக்கொள்பவர்கள்மீது வழக்குகள் பாயும் என்பதும், உயிருக்கே ஆபத்து என்று சொல்லப்படுவது பற்றியும் தெரியுமா?’’ என்று கேட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick