இலங்கையிடம் பேசுவாரா பிரதமர் மோடி?! - தமிழக மீனவர்களை ஒழிக்கும் சட்டம்

மிழக மீனவர்களின் உயிரைப் பறித்து, உடல்களைச் சிதைத்து, உடைமைகளை அபகரித்துவந்த இலங்கை அரசு இப்போது, இவர்களின் வாழ்வாதாரத்தைச் சட்டபூர்வமாகப் பறிக்கத் தொடங்கியுள்ளது.

1983-க்கு முன்புவரை தொப்புள்கொடி உறவுகளாகவும் மாமன் மச்சான்களாகவும் உறவாடியபடி இந்திய-இலங்கை மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்தனர். இலங்கையில் எழுந்த இனப்பிரச்னையைக் காரணம்காட்டி இரு நாட்டு மீனவர்களின் உறவுக்கு வெடிவைத்தது இலங்கை அரசு. இதுவரை, 600-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல் ஊனமடைந்தனர். மீனவர்களின் பல கோடி மதிப்புடைய உடைமைகள் நாசமாக்கப்பட்டன. இந்தச் சூழலில், இந்த ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் மூலம் இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை  இலங்கை அரசு முடக்க முயற்சி செய்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick