நினைவில் உள்ளதா நினைவு இல்லம்? - கலாம் அன்பர்கள் கவலை | Abdul Kalam National Memorial work hold in Rameshwaram - Junior Vikatan | ஜூனியர் விகடன்

நினைவில் உள்ளதா நினைவு இல்லம்? - கலாம் அன்பர்கள் கவலை

மாணவர்களின் கனவு நாயகனாகவும், மக்களின் ஜனாதிபதியாகவும் திகழ்ந்து மறைந்தவர் டாக்டர் அப்துல் கலாம். அவர் மறைந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது நினைவு மண்டபம் நிறைவேற்றப்படாமல் முடங்கிக்கிடக்கிறது.

2015 ஜூலை 27-ம் தேதி கலாம் உயிரிழந்தார். அவரது உடல் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, கலாமின் நினைவிடத்தை அமைக்கும் பணியை எடுத்துக்கொண்டது. 2016-ம் ஆண்டு கலாமின் முதலாம் நினைவு நாளில், ‘டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தேசிய நினைவிடம்’ அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தமிழக அரசு வழங்கிய சுமார் மூன்று ஏக்கர் நிலத்தில் மொகலாயக் கட்டடக் கலை வடிவமைப்புடன் கூடிய நினைவிடம் ஒன்பது மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்டது.  கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட இந்த நினைவிடத்தின் 2-ம் கட்டப் பணிகள் துவங்கப்படாமல், கடந்த ஓராண்டாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick