அபசகுண ஆட்சி - கவிதை | Inauspicious government - Poetry - Junior Vikatan | ஜூனியர் விகடன்

அபசகுண ஆட்சி - கவிதை

யுகபாரதி

ல்லாத்தையும் மாத்துறேன்னு
அய்யா நீங்க சொன்னீங்க
என்ன பாவம் செஞ்சோமின்னு
எங்கள இப்படி கொன்னீங்க?

அம்மாவோட ஆட்சியின்னு
கதய அளந்து விட்டீங்க
சும்மா கெடந்த எங்கள ஏய்யா
சொல்லாமலே சுட்டீங்க?

போராடவே கூடாதுன்னு
போட்டீங்களா திட்டத்த
பொறுக்கியெல்லாம் ஒண்ணாச்சேந்து
பொசுக்கிட்டீங்க சட்டத்த

ஊரே பத்தி எரியிறப்போ
கொடுக்குறீங்க பேட்டிய
அவுந்துபோச்சு ஒங்க மானம்
இறுக்கிக் கட்டுங்க வேட்டிய

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick