வெளிச்சம் வாங்கி வாறேன் - கவிதை

அறிவுமதி

 1
முத்து நகர்
சனங்களுக்கு
மூச்சு
வாங்கிப்
போறேன்

அவுக
மூட்டி
வளர்த்த
நெருப்புலத்தான்
வெளிச்சம்
வாங்கி
வாறேன்!

சுட்டுச்
சுட்டு
கிடக்குதுங்க
தூய
தமிழ்
உடல்கள்!

அட
உலகத்
தமிழர்
விழிகளிலே
உப்பு
பூத்த
கடல்கள்!

2
நூறு
நாளு
போராட்டம்
யாருக்குன்னு
நடக்கு!
அந்த
நாறுங்காத்து
மூச்சிழுத்து
புள்ள
செத்துக்
கிடக்கு!

நாங்க
செத்தும்
புள்ளைகள
காப்பாத்த
நெனைச்சோம்!
இன்று
நாதியத்த
இனமாகச்
சூடுபட்டுத்
துடிச்சோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்