“முதல்ல நுழைஞ்சவன் நான், அப்பவே ஜீப் எரிஞ்சுட்டு இருந்தது!” - கள நிலவரம்

ழக்கமான மருந்து வாடையைத் தாண்டி, ரத்தவாடை அடிக்கிறது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில். காவல்துறை நடத்திய அத்தனை கொடூரங்களுக்கும் சாட்சியாக நிற்கின்றன பெயின்ட் உதிர்ந்த மருத்துவமனைச் சுவர்கள். காக்கிகளின் வேட்டையில் சிக்கிப் படுகாயமடைந்த அத்தனை பேரும் 5-ம் தளத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிர்ச்சி, வலி, சோகம், விரக்தி என அங்குள்ள கட்டில்கால்கள் ஆயிரம் கதைகளைச் சுமந்து நிற்கின்றன.

உடல் முழுக்கக் காயங்களுடன் படுத்திருக்கிறார் பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ். ‘‘22-ம் தேதி போராட்டம்னு முன்னாடியே அறிவிச்சிருந்தாங்க. போராட்டத்துல கலந்துக்குறவங்களுக்கு தண்ணி, பிஸ்கெட் கொடுக்கிற வேலையை நானும் என் நண்பர்களும் பிரிச்சுக்கிட்டோம். முதல்ல வி.வி.டி சிக்னல்ல போலீஸ் தடுத்தாங்க. முன்னாடி இருந்த பெண்கள் அவங்களைத் தாண்டிப் போகவும் பின்னாடியே போனோம். மூணாம் மைல் பாலத்துல கண்ணீர்ப் புகைக்குண்டு போட்டுட்டு, அதுக்கப்புறம் வந்து எங்களை அடிச்சாங்க. எனக்கு முதல் அடியே தலைலதான். ஒரு திருநங்கை அக்காதான் ஓடிவந்து குறுக்க விழுந்து எங்களைக் காப்பாத்துனாங்க. அதுக்குள்ள போலீஸ் சைடுலேருந்து கல் வந்து விழுந்துச்சு. உடனே, அந்த இடமே போர்க்களமாயிடுச்சு. தனியா பிரிஞ்சுட்ட ஒரு லேடி போலீஸை அடிபடாம கூட்டிட்டுப்போய் ஓரமா விட்டுட்டு, கலெக்டர் ஆபீஸ்குள்ள நுழைஞ்சேன். முதல்ல நுழைஞ்ச சில பேர்ல நானும் ஒருத்தன். நாங்க போனப்பவே அங்கே ஜீப், கார் எல்லாம் தீப்பிடிச்சு எரிஞ்சது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்