பலி எண்ணிக்கை அதிகம்! - மறைக்கப்படும் மரணங்கள் | Hidden total death toll in thoothukudi which is actually high - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/05/2018)

பலி எண்ணிக்கை அதிகம்! - மறைக்கப்படும் மரணங்கள்

“தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 என்று சொல்லி, கணக்கை முடித்துக்கொள்ளப் பார்க்கிறது காவல்துறை. ஆனால், பலியானவர்களின் எண்ணிக்கை 30-க்கும் அதிகமாக இருக்கும். அதை, போலீஸார் மறைக்கிறார்கள்” என்று பகீர் கிளப்புகிறார்கள் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள்.

மூத்த வழக்கறிஞர்களின் உதவியுடன் கிராமம் தோறும் சென்று காணாமல் போனவர்களின் பட்டியலைச் சேகரித்து வருகிறார் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வள்ளிநாயகம். அவரைச் சந்தித்தோம்.

‘‘தூத்துக்குடியில் மக்களின் போராட்டம், வன்முறையாக மாறியது எப்படி?”

‘‘அந்த வன்முறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது. மாதா கோயில் முன்னிருந்து பேரணி தொடங்கியது. வரும் வழியில் எந்த இடத்திலும் வன்முறை இல்லை. சுமார் 8 கி.மீ தூரம் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் நடந்தே வந்தனர். சிலரை மட்டுமே ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் போலீஸ் அனுமதித்தது. அங்கு அவர்கள் நுழைந்தபோதே, உள்ளிருந்து கரும்புகை வந்துவிட்டது. ஏற்கெனவே அங்கிருந்த போலீஸார், வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளனர். உள்ளே சென்ற மக்கள் வெளியே ஓடிவந்தபோது, போலீஸார் அவர்கள்மீது தடியடி நடத்தினர். அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அந்தச் சூழலை எதிர்பார்த்திருந்த போலீஸார், முன்னெச்சரிக்கையின்றி மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டனர்.”