மதுரையில் ரூ.4 ஆயிரம் கோடி நிலம் அபேஸ்? - மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானதா?

‘மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க வேண்டும்’ என்று திருத்தொண்டர்கள் சபை என்ற ஓர் அமைப்பு எழுப்பியுள்ள புகார், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாட்டுத்தாவணி எதிரே உள்ள வணிக வளாகங்கள் நிறைந்துள்ள பகுதியை, இதுதான் ‘ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி’ என்று அந்த அமைப்பினர் சமீபத்தில் கைகாட்டியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து ஆலய சொத்துகள் பலவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், கோயிலை விட்டு அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் சில கோரி வருகின்றன. மேலும், மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்துக்குப்பின், திருக்கோயில் நிர்வாகத்தின் மீது சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து இப்போது, கோயில் சொத்து தொடர்பாகச் சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்