கழுகார் பதில்கள்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

நல்ல அரசியல்வாதியை எப்படி அடையாளம் காண்பது?


நல்ல அரசியல்வாதியை அடையாளம் காணமுடியாது. அவர்கள், கண்ணுக்குத் தெரியமாட்டார்கள்; அமைதியாய் சில காரியங்களைப் பரபரப்பு இல்லாமல், ‘லைவ்’ இல்லாமல் செய்துகொண்டிருப்பார்கள்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

ஆர்.கே.நகர் தொகுதியில் 20 ரூபாய் டோக்கன்களுக்கு இன்னும் பணம் பட்டுவாடா ஆகவில்லையென்று பொதுமக்கள் போராட்டம் நடத்துவது பற்றி..?


‘வெட்கமில்லை
இங்கு வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை -  என்றார் பாரதிதாசன்.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

அரசியல் நடிப்பு யாருக்கு வராது?


அரசியலுக்கு வந்துவிட்டாலே நடித்துத்தான் ஆகவேண்டும். நடிப்பு வராதவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள்.

சீர்காழி சாமா. ஸ்ரீரங்கம்

நதிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறாரே?


முதலில் நாகர்கோவிலுக்கும் திருவனந்தபுரத்துக்கும் நல்ல சாலை போடச் சொல்லுங்கள். அப்புறம் இணைக்கலாம் நதிகளை... ஆறுகளை... கடல்களை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்