அ.ம.மு.க Vs அ.தி.மு.க - கோவை குஸ்தி | AMMK Vs ADMK in Coimbatore - Junior Vikatan | ஜூனியர் விகடன்

அ.ம.மு.க Vs அ.தி.மு.க - கோவை குஸ்தி

“நாங்கள் அ.ம.மு.க-வின் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி விட்டு வந்துகொண்டிருந்தோம். சுமார் நூறு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வந்து எங்களைத் தாக்கியது. ‘எங்களைமீறி நீங்கள் எப்படி கூட்டம் நடத்தலாம்’ என்று சொல்லிக்கொண்டே எங்களைத் தாக்கினர். எங்களின் கார் கண்ணாடிகளை உடைத்தனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நிழலாக வலம்வரும் சந்திரசேகர் தலைமையில்தான், அந்த அராஜகம் நடந்தது. கடைசியில், தாக்கியவர்களை விட்டுவிட்டு எங்கள்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று கொந்தளிக்கிறார்கள் அ.ம.மு.க-வினர்.

டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் வடவள்ளியில் மே 17-ம் தேதி அ.ம.மு.க-வின் செயல் வீரர்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு, ஆரம்பம் முதலே ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துவந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick