“லேட்டா வந்தாலும்... லேட்டஸ்டா வருவார்!” - ‘ரஜினி மன்ற’ காயத்திரி துரைசாமி

“எங்கள் தலைவர் லேட்டா வந்தாலும்... லேட்டஸ்டா வருவார்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார், ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி தலைவியான காயத்திரி துரைசாமி.

தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றின் துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் காயத்திரி துரைசாமி, ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி தலைவியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரிடம் பேசினோம்.

‘‘மென்பொருள் துறையிலிருந்து அரசியல் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?’’

“2015 சென்னை வெள்ளத்தின்போது, சமூகம் சார்ந்த பல விஷயங்களில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் பலருக்கும் ஏற்பட்டது. அதுதான், பொது வாழ்வில் நுழைவதற்கு வழியமைத்துக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து, கூவத்தூரில் நிகழ்ந்த அரசியல் அசிங்கங்களைப் பார்த்த பிறகு, தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வேண்டும் என்று எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில், கட்சி தொடங்குவதாக தலைவர் ரஜினி அறிவித்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அவரது திரைப்படங்களை ரிலீஸான முதல்நாளே முதல் ஷோவே பார்த்துவிடுவேன். அந்த அளவுக்கு அவரின் மிகப் பெரிய ரசிகை நான். அரசியலுக்கு வந்தது இப்படித்தான்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்