கம்பேரிஸன் கோவாலு!

ரக்கம், மனிதம் போன்றவையெல்லாம் இப்போதைய அதிகார வர்க்கத்தின் அகராதியில் இல்லவே இல்லை போல! துள்ளத் துடிக்க ஏராளமான உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது காக்கிகளின் வெறியாட்டம். போதாக்குறைக்கு இந்தத் கொடூரத்தைத் திசைதிருப்பும், ஆதரிக்கும் கல்நெஞ்சக்காரர்கள் வேறு. அவர்களில் சிலருக்கு சில அறிவுரைகள் சொல்லத் தோன்றுகிறது.

* அ.தி.மு.க அமைச்சர்கள்: தெர்மாகோலில் விளையாட்டு காட்டுவது, பொதுமேடைகளில் உளறிக்கொட்டுவது என்று சாமர்த்தியமாக நாள்களைக் கடத்தியதுவரை ‘கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்’ என்ற ஒப்பந்தம் இருந்தது. இப்போது இத்தனை உயிர்களைப் பலிகொண்டுவிட்டு, திரும்பவும் பழையபடி விளையாட்டு காட்டுவீர்களா என்ன? போதும் கோமாளித்தனங்கள்! உங்களை மாற்றிக்கொள்வதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் எல்லோருக்கும் நல்லது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்