“13 பேரின் வீர மரணத்துக்கு கிடைத்த வெற்றி!”

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, போராட்டம் அடங்கிவிடும் என்று ஆட்சி யாளர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக நிலைமை இருந்தது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட உணர்வு தூத்துக்குடி மக்களிடம் முன்பைவிட பல மடங்கு அதிகரித்தது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டால் மட்டுமே தூத்துக்குடியில் அமைதி திரும்பும் என்ற நிலையில், அ.குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி ஆகிய கிராமங்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை மக்கள் மீண்டும் தொடங்கினர்.

பண்டாரம்பட்டியைச் சேர்ந்த குணசேகரனிடம் பேசியபோது, ‘‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற எங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அதனால்தான், மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்