“துப்பாக்கிச் சூட்டின்போது என்ன செய்து கொண்டிருந்தார் முதல்வர்?”

நீதியரசர் அரிபரந்தாமன் அதிரடி!

‘‘ஈரமும், உணர்வுமுள்ள ஒட்டுமொத்த இதயங்களையும் நொறுக்கியுள்ளது தூத்துக்குடியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு. ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுங்கள்’ என்று தங்கள் உரிமைக்காகப் போராடிய சொந்த மக்கள் மீதுதான் பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது மனிதநேயமற்ற மாநில அரசு” என மிகக் காட்டமாக விமர்சிக்கிறார் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன். அவரைச் சந்தித்து, தூத்துக்குடி துயரங்கள் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?”

‘‘இது, வெள்ளைக்காரன் போட்ட சட்டம். இதில்,  தண்ணீர் பீய்ச்சி அடிக்கணும், லேசான தடியடி நடத்தணும், வானத்தை நோக்கிச் சுடணும் எனச் சில விதிமுறைகள் வகுத்துருக்காங்க. அவர்களின் நோக்கம் கூடிய கூட்டத்தைக் களைந்துபோக வைப்பதுதானே ஒழிய, சுடுவதல்ல.  ஆனால், இங்கே என்ன நடந்தது? ஃபைபர்   தடிகளாலும், சில இடங்களில் இரும்பு ராடுகளாலும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். குறிபார்த்துச் சுட்டுள்ளனர். சட்டவிதிகள் எல்லாம் இருக்கட்டும், என்னைப் பொறுத்தவரை ஒரு ஜனநாயக அரசு, சொந்த மக்களைச் சுடவே கூடாது. அமெரிக்கா, ஐரோப்பா, கனடா என எங்கும் இதுபோலச் சொந்த நாட்டு மக்கள்மீது கொடூரமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில்லை.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick