“ஜெ. சிகிச்சை குறித்த தகவல்களைத் தர மறுக்கும் தகவல் அதிகாரிகள்!” | Officers refuse to reveal Jayalalithaa treatment informations - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/05/2018)

“ஜெ. சிகிச்சை குறித்த தகவல்களைத் தர மறுக்கும் தகவல் அதிகாரிகள்!”

தகவல் அறியா உரிமைச் சட்டம்!?

ரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (ஆர்.டி.ஐ), இனிமேல் தகவல் அறியா உரிமைச்சட்டம் என்று பெயர் மாற்றம் செய்துவிடலாம் என்கிற அளவுக்கு, பொதுமக்கள் கேட்கும் தகவல்களைத் தர மறுத்துப் பொதுத் தகவல் அதிகாரிகளும், தகவல் ஆணைய அதிகாரிகளும் சட்டத்தை மீறிவருகிறார்கள்.

ஆர்.டி.ஐ-யின் கீழ் பெறப்பட்ட பல தகவல்கள், அரசின் பல்வேறு முறைகேடுகளையும், அதிகாரிகளின் அத்துமீறல்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன. அதனால், ஆர்.டி.ஐ என்றாலே அதிகாரிகள் அலறுகிறார்கள். எனவே, தகவல்களைத் தராமல் மனுதாரர்களைப் பொதுத்தகவல் அதிகாரிகள் அலைக்கழிக்கும் கொடுமை நடக்கிறது. இது தொடர்பாக, ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்.

சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ, ஆர்.டி.ஐ-யின் கீழ் பல தகவல்களைப் போராடிப் பெற்றவர். அவர், “பொதுத் தகவல் அதிகாரிகள், வித்தியாச வித்தியாசமாக யோசித்துத் தகவல்களைத் தர மறுக்கின்றனர். ஏதாவது ஒரு சட்டப்பிரிவைச் சொல்லி, அதன் கீழ் தகவல்கள் தர இயலாது என்பார்கள். சரி இப்படிச் சொல்கிறார்களே என்று வேறு வகையில் கேட்டால், ‘அரசு ஊழியர்களின் மனித வளத்தை வீணடிப்பதாக உள்ளதால், உங்களுக்குத் தகவல் தர இயலாது’ என்று மறுக்கிறார்கள்.