“அப்பாவை மிதிச்சே கொன்னுடுச்சு மசினி!” - கதறும் மகன்

மயபுரம் மாரியம்மன் கோயில் யானை, பாகனைக் கொன்ற அதிர்ச்சியில் உறைந்துகிடக்கிறார்கள் பக்தர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், சமயபுரம் கோயிலுக்கு வழங்கப்பட்ட யானை, மசினி. இந்த யானையை ஸ்ரீரங்கம் அஹோபில மடத்தைச் சேர்ந்த கஜேந்திரனும், அவரின் மகன் அச்சுதனும் பராமரித்து வந்தனர். வழக்கம்போல, மே 25 காலையில் யானைக்கு அலங்காரம் செய்து, கோயில் கொடிமரம் அருகே அதை நிறுத்தினார் பாகன் கஜேந்திரன். பின்னர், யானையின் அருகில் அவர் உட்கார்ந்த சில நிமிடங்களில் நடந்ததுதான் பெரும் சோகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick