“மரணப் படுக்கையில் கிடக்கும் ஊரை... தாங்கிப் பிடிச்சிருக்கோம் சாமி!” - ‘வாழ்ந்து கெட்ட’ ஓர் ஊரின் கண்ணீர் கதை!

ரூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சூலபுரம் கிராமத்தின் கதையை அந்தக் கிராம மக்கள் சொல்லக் கேட்டால், நம் கண்களில் கண்ணீர் கசிகிறது.

“சூலபுரம்ன்னா 1990-க்கு முன்பு வரை சுத்துப்பட்டுல அப்படி ஒரு பேரு. பதினெட்டுப் பட்டிக்கு இதுதான் தலைக்கட்டு கிராமம். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கடவூர் ஒன்றியங்கள்லேயே பெரிய ஊரா, வசதியான ஊரா சூலபுரம் இருந்துச்சு. இந்த ஊர்ல பொண்ணு கொடுக்க, பொண்ணு எடுக்க எட்டூரு சீமையிலயும் போட்டா போட்டி நடக்கும்” என்று தங்கள் கிராமத்தின் கதையைக் கண்கள் விரிய விவரிக்க ஆரம்பிக்கிறார் 91 வயதாகும் அப்துல் ரஷீத்.

அவரே தொடர்கிறார். “இங்கே, ஆயிரம் வீடுகள் இருந்துச்சு. ஒவ்வொரு குடும்பமும் அவ்வளவு வசதி வாய்ப்பா இருந்துச்சு. 1959-ல் கரூர் புலியூர்ல ஆரம்பிக்கப்பட்ட செட்டிநாடு சிமென்ட் ஆலைக்காரங்க, கடவூர், குஜிலியம்பாறை ஒன்றியங்கள்ல 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள்கிட்ட நிலங்களை வாங்கினாங்க. எங்க ஊர்க்காரங்களும் விவரம் பத்தாம நிலங்கள்ல ஒரு பகுதியை வித்துட்டாங்க. எங்க அப்பாவும் பாதித் தோட்டங்களைத் தாரை வார்த்துட்டார். அதன் விளைவு, 1990-க்குப் பிறகுதான் தெரிய ஆரம்பிச்சுச்சு. சுண்ணாம்பு கல் எடுக்க பூமியைக் கொஞ்சம் கொஞ்சமா தோண்டி, 900 அடிகளுக்குக் கீழ தோண்ட ஆரம்பிச்சதும், 30 ஊர்கள்லயும் பூமிக்குள் நிலத்தடி நீர் மட்டம் 1,000 அடிக்குக் கீழே போயிருச்சு. விவசாயம் பண்ண வழியில்லை. குடிக்கவே தண்ணீர் கிடைக்கலை. ‘விதி விட்டது வழி’ன்னு மக்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கிட்டு, அசலூரு போயிட்டாங்க. என் குடும்பமும் நொடிச்சுப் போச்சு. என்ன ஆனாலும் என் கட்டை இங்கதான் வேகணும்ன்னு வைராக்கியமா இங்கேயே வாழுறேன்” என்று சொன்னபோது, அவரின் கண்கள் பனித்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்