தாம்பூல அழைப்பு... தங்க நாணயம் பரிசு! | TN Government schools offers gold coin and smart phones for admission - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/05/2018)

தாம்பூல அழைப்பு... தங்க நாணயம் பரிசு!

அசத்தும் அரசுப் பள்ளிகள்!

மிகக் குறைந்த எண்ணிக்கையில் மாணவர் இருப்பதால் 800-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளைத் தமிழக அரசு மூடப்போகிற என்ற செய்தி பல தரப்பினரையும் கொந்தளிக்க வைத்தது. அதன் பிறகு, பள்ளிகள் மூடப்படாது என அரசுத் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

அரசின் போக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களில் பலர் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த பாராட்டுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.

வெற்றிலை பாக்கு... தாம்பூலத்தட்டு!

பெரம்பலூர் மாவட்டம் கொத்தவாசல் கிராமம். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிலர், கையில் வெற்றிலை பாக்குடன் தாம்பூலத்தட்டுடன் ஊருக்குள் வந்தனர். அந்த இடத்தில் இருந்த நாம், “என்ன விஷேசம் சார்?” என்று ஆசிரியர் இளவழகனிடம் கேட்டோம். “பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில மோகத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அவர்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்ற இளவழகன், மேலும் தொடர்ந்தார்.