ரஜினி வாய்ஸ் - யாருடையது? யாருக்கானது? | VIPs comments about Rajini's Thoothukudi statement - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/06/2018)

ரஜினி வாய்ஸ் - யாருடையது? யாருக்கானது?

‘‘தூத்துக்குடியில் கலவரம் ஏற்படுத்தியவர்கள் விஷக்கிருமிகள்... சமூக விரோதிகள். தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாக உள்ளனர். இவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டுக்கே ஆபத்து. தமிழ்நாட்டில் அடிக்கடி போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இப்படிப் போராட்டபூமியாக மாறினால், தமிழ்நாட்டுக்கு எந்தத் தொழிலும் வராது. போலீஸைத் தாக்கியவர்களை விடக்கூடாது. போராடிக்கொண்டே இருந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்” என்று பரபரப்பு கிளப்பியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அவரது கருத்தை எதிர்த்தும் ஆதரித்தும் பல குரல்கள் எழுந்துள்ளன.

பி.ஜே.பி-யும், அ.தி.மு.க-வும் அவர் சொல்வதை ஆதரித்துள்ளன. ‘இது பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க-வின் குரல்’ என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ரஜினியைக் கடுமையாக விமர்சித்துள்ளன. ‘ரஜினி சொல்லும் கருத்து யாருடையது? யாருக்கானது?’ என்று அரசியல் பிரமுகர்களிடம் கேட்டோம். அவர்களின் பதில்: