மக்கள் போராட்டத்தின் சாதனை - டாஸ்மாக் இல்லாத டவுன்!

‘மக்கள் எதுக்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம்னு போய்க்கிட்டே இருந்தா, தமிழ்நாடு சுடுகாடாயிடும்ங்க!’ என்ற கருத்தால் தமிழகம் முழுவதும் சர்ச்சைத் தீயைப் பற்ற வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால், ஓர் உன்னதமான மக்கள் போராட்டத்தால், தமிழகத்துக்கே முன்னுதாரணமாக கோவை கருமத்தம்பட்டி மாறியிருக்கிறது.

கோவை மாவட்டம், சூலூர் வட்டத்தில் உள்ளது, கருமத்தம்பட்டி பேரூராட்சி. இங்கு, சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கிறார்கள். விவசாயத்தை நம்பியிருந்த கிராமம், தற்போது விசைத்தறியை நம்பியிருக்கிறது. இங்கு பலரும் விசைத்தறிக்கூடங்களில் தினக்கூலி அல்லது வாரக்கூலி அடிப்படையில் பணிபுரிகிறார்கள். மக்களின் தொடர் போராட்டங்களால், ‘டாஸ்மாக் கடை இல்லாத போலீஸ் சரகம்’ என்று கருமத்தம்பட்டி அடையாளம் பெற்றிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்