“உன்னைக் காலி செய்திடுவேன்!” - பெண் ஆர்.ஐ-யை மிரட்டிய தாசில்தார்

‘‘என் உத்தரவுகளை ஏன் செயல்படுத்தவில்லை? உன்னைக் காலி செய்திடுவேன். நீ ஒரு ஜீரோ. ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீயை ஜெயிலுக்கு அனுப்பிடுவேன். அவர் கம்பி எண்ணுவார். அதே நிலைதான் உனக்கும். உனக்கு என்ன அவ்வளவு திமிரா?’’ என்று பெண் வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ.) ஒருவரை, தாசில்தார் ஒருவர் மிரட்டிய ஆடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாகி திருவள்ளூர் மாவட்ட வருவாய்த் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

‘மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகள்மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ‘மணல் கொள்ளையர்களுக்கு எதிராகச் செயல்பட்டதால் எனக்கு கொலைமிரட்டல் விடுத்தார்’ என்று ஆவடி தாசில்தார் மதன் குப்புராஜ்மீது ஆர்.ஐ தனுஜா டயானா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகாரும் அளித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick