ஒன்றுக்கு இரண்டாக ரிங் ரோடுகள்! | Ring roads on Agricultural Lands in Madurai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/06/2018)

ஒன்றுக்கு இரண்டாக ரிங் ரோடுகள்!

மதுரை விவசாயிகளை அதிரவைக்கும் அரசுகள்

‘எங்கள் ஊருக்கு ரோடு வேண்டும்’ என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வெறுத்துப் போன மக்கள் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இருக்கிறார்கள். ஆனால், கேட்காத இடத்தில் மத்திய அரசு ஒரு ரோடும், மாநில அரசு ஒரு ரோடும் போடுவதாக அறிவித்து, வளமான நிலங்களை இரண்டு ரோடுகளுக்காகவும் கையகப்படுத்துவதாக அறிவிக்க... கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் மதுரை விவசாயிகள்.

திருச்சியிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை NH 45B, திண்டுக்கல்லிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை NH 44, என்ற இரு நெடுஞ்சாலைகளும் மதுரை வழியே செல்கின்றன. மதுரை நகரைச் சுற்றியபடி, இந்த இரு நெடுஞ்சாலைகளையும் இணைக்கும் விதமாக ரிங் ரோடு அமைக்கத் திட்டம் தீட்டினர். ரிங் ரோடு வந்தால், ஒரு நெடுஞ்சாலையிலிருந்து இன்னொரு நெடுஞ்சாலைக்குச் செல்லும் வாகனங்கள், நேரத்தையும் எரிபொருளையும் மிச்சம் செய்ய முடியும். மதுரை மாநகருக்குள் நெரிசலும் குறையும்.