வீட்டில் இருந்தபடியே... மொபைல் போன் மூலம் ஓட்டு போடலாம்!

‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம்... பழையபடி வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும்’ என்ற கோரிக்கையைப் பலரும் முன்வைத்துவரும் நிலையில், வெளிநாடுகளிலிருந்தும் இந்தியர்கள் வாக்களிக்கும் வகையிலான மொபைல் ஆப் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார் தமிழக இளைஞர் ஒருவர்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான குருசாமி என்பவர் தான் இந்தக் கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குருசாமியின் தந்தை ஓர் அச்சகத் தொழிலாளி, தாய் தீப்பெட்டித் தொழிலாளி. கணினி மென்பொருளில் நிபுணரான குருசாமியிடம் பேசினோம்.

“சின்ன வயதிலிருந்தே எனக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகம். எங்கள் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நாரணபுரம் அரசுப் பள்ளி, திருத்தங்கல் கலைமகள் பள்ளி ஆகியவற்றில் பள்ளிப்படிப்பை முடித்தேன். மதுராந்தகம் அருகே செண்டு பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்தேன். ‘நாடு முழுவதற்கும் பயன்படும் வகையில் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடி’ என என் நண்பர்களும் பேராசிரியர்களும் என்னை உற்சாகப்படுத்தினர். தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான செயலியை உருவாக்கும் எண்ணம் அப்போது எனக்கு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்